பக்கம்:சைவமும் தமிழும்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 509 கற்றுனை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே (132) நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய் அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே (220) எல்லாப் பாடல்களுமே நெஞ்சத்தை நீர்ப்பண்டாக்கு LJöᏈaᏯaf. - (3) பதிகங்கள் (7) சிகாமணிமாலை: புள்ளிருக்குவேளூர் (வைத்தீசு வரன் கோயில்)பற்றிய இது பதினைந்து பாடல்களைக் கொண்டது (கட்டளைக்கலித்துறை) கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப் பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும் இல்லேன் எனினும்நின் பால் அன்றி மற்றை இடத்தில்சற்றும் செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே (3) ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால் நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே