பக்கம்:சைவமும் தமிழும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 5 § வழி” என்று வழங்கப்பெறும். சித்தாந்தத்தைத் தெரிந்துகொள்ள விழையும் நீ இந்த மரபுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஆன்டன், கார்த்திகேயன். చీ, அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைவதாகுக. இக்கடிதத்தில் பதினான்கு சாத்திரங்களைப்பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றேன். இவை இந்நூல்களின் பெருமைகளைப் புலப்படுத்துவனவாகவே அமையும். - முன்னர்க் குறிப்பிட்ட (இரண்டாவது கடிதம்} பதினான்கு நூல்களுள் திருவுக்தியார் (1) திருக்களிற்றுப் படி யார் (2) என்ற இரண்டு நூல்களும் திருவியலூர் உய்யவந்த சந்தானத்தில் தோன்றியவை என்பதை நினைவு கூர்க. இவையே காலத்தால் முற்பட்ட நூல்களாகும், ஏனைய பன்னிரண்டும் மெய்கண்ட சந்தானத்தில் தோன்றியவை. இந்த இரு திழுத்து நூல்களும் துவலும் பொருளால் ஒன்று. பட்டவை. ஆயினும் அவற்றைத் தெரிவிக்கும் முறையில் சிறிது வேறுபாடு உடையவை. - - - . உந்தியும் களிறும் சித்தாந்தப் பொருள்களை உபதேச முறையால் கூறுகின்றன. இங்குப் பரபக்கப் பார்வைக்கே முனிகள் உபதேசம் பெற்றார். நாத முனிகள் தொடங்கி இராமாநுசர்வரையிலும் அவருக்குப் பின்னரும் உள்ள ஆசாரியர்கள் இந்நில உலகிலிருப்பவர்கள். மேய்கண்டாரை முதல் ஆசாரியராகக் கருதப் பெறுவதைப் போலவே, நம்மாழ்வாரையும் முதல் ஆசாரியராகக் கருதுவது தவறில்லை. , - .