பக்கம்:சைவமும் தமிழும்.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 சைவமும் தமிழும் வான்கொண்ட நின்அருள் சீரேத்து கின்ற வகைஅறியேன் தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே (13) (9) நல்ல மருந்து: இதுபுள்ளிருக்கு வேளுர் வைத்திய நாதனைப்பற்றியது. சிந்துயாப்பாலானது. பல்லவி நல்ல மருந்திம் மருந்து-சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து கண்ணிகள் அருள்வடிவான மருந்து-நம்முன் அற்புதமாக அழர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து-அன்பர்க் கின்புரு வாக இருந்த மருந்து-நல்ல (1) அம்பலத் தாடு மருந்து-பர மாநந்த வெள்ளத் தழுந்து மருந்து எம்பல மாகு மருந்து-வேளூர் - என்னுந் தலத்தி லிருக்கு மருந்து-நல்ல (9) இங்ங்னம் இது 29 கண்ணிகளைக் கொண்டிலங்குவது. (1) திருவாரூர்ப்பதிகம் அறுசீர்க்கழி நெடிலடி ஆசி ரிய விருத்தங்களாலான பத்துப்பாடல்களைக் கொண்டது. உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநாளேனும் ஒழிந்திடவும் வெள்ளக் கருணை இறையேனும் மேவி விடவும் பெற்றறியேன் கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன். எனினும் கடையேனைத்