பக்கம்:சைவமும் தமிழும்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 511 தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே (8) என்பது எட்டாம் பாடல். (3) பழமலைப் பதிகம்: இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பத்துக் கொண்டது. , இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை வளைத்த மதின்மூன் றெளித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத் திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழும் துரியா தீதமட்டும் கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே (4) என்பது இதன் நான்காம் பாடல். (1) திருவண்ணாமலைப் பதிகம்: இது பத்து எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் கொண்டது. பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி ஏத்திடும் முடியும் கூத்டுைம் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் கோத்திடும் அடியர் மாலையின்அளவில் குலவினை என்றுநல் லோர்கள் சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே (3). என்பது இதன் மூன்றாம் பாடல். (22) சித்திவிநாயகர் பதிகம். இது வழக்கத்திற்கு மாறாக காப்பாகநேரிசை வெண்பா இரண்டும் எழுசீர்க் கழிநெடி லடி ஆசிரியவிருத்தம் பத்தும் கொண்டது. ஐங்கரத்தானை அற்புதமாகப் பாடிய பாடல்களை உடையது.