பக்கம்:சைவமும் தமிழும்.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுமுகத் தான்மகன்யால் அஞ்சுமுகத் தான்.அருள்வான் அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான்-அஞ்சுமுக வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஒர் அரையோ டஞ்சரையான் கண்கள் அவை, (1) இது காப்பாக வருவது. உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை வெள்ளம்,உண் டிரவு பகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும் விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே (4) என்பது இதன் நான்காம் பாடல். இங்ங்னம்பல அற்புதமான பாடல்களைத் தன்.அகத்தே கொண்டு இலங்குவது இம்மூன்றாம் திருமுறை. நான்காம் திருமுறை இதிலுள்ள சில பதிகங்களையும் அவற்றினுள்ள சில பாடல்களையும் காட்டுவோம். (2) போற்றித்திருப்பதிகம். இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பத்துக் கொண்டது. பாடல்கள் யாவும் அந்தாதித் தொடையில் அமைந்திருத்தல் இதன் சிறப்பு.