பக்கம்:சைவமும் தமிழும்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 513 மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக் கருளமு தருளுக போற்றி பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே பாடுதல் வேண்டும்நான் போற்றி தணிவில்பேர் ஒளியே போற்றிஎன் தன்னைத் தாங்குக போற்றிநின் பதமே (2) என்பது இதன் இரண்டாம் LITTL-6ು. (5) எதிர்கொள்பத்து: இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் பத்துக் கொண்டது. சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத் தூயனை யாவரும் சொல்லரி யானைப் பந்தம்.அ றுக்கும்ப ராபரன் தன்னைப் பத்தர்உ ளங்கொள்ப ரஞ்கட ரானைப் மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை வானவர் எல்லாம்வ னங்கநின் றானை எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை இன்றைஇ ரவில்ள ரிந்துகொள் வேனே (4) என்பது இதன் நான்காம் பாடல். (6) புறமொழிக் கிரங்கல்: கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில் பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்.எனைப் பெற்றவளும் பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே சை.த-33