பக்கம்:சைவமும் தமிழும்.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 - சைவமும் தமிழும் பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே (4) என்பது இதன் நான்காம் பாடல். (9) உய்கைத் திருப்பதிகம்: கலிவிருத்த யாப்பில் பத்துப் பாடல்களைக் கொண்டது. மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும் பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக் கதியின் வைப்பது நின்கடன் வன்கடல் வதியும் நஞ்சம்.அ னிமணி கண்டனே (6) என்பது ஆறாம் பாடல். (1) அபராத விண்ணப்பம்: இஃது அறுசீர்க் கழிநெடி லடி ஆசிரியவிருத்தம் 22 கொண்டது. புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல் நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே (17) என்பது இதன் பதினேழாம் பாடல். (1) கலிவிண்ணப்பம்: கட்டளைக் கலித்துறை யாப் பால் அமைந்த பத்துப் பாடல்களையுடையது இப்பதிகம். ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்