பக்கம்:சைவமும் தமிழும்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 515 வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே (6) என்பது இதன் ஆறாம் பாடல். (13 சரணப்பதிகம்: இது கலிநிலைத்துறை யாப்பால் அமைந்த பதினொரு திருப்பாடல்களைக் கொண்டது. செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன் நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல் உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய் வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே (4) என்பது இதன் நான்காம் பாடல். (14) பொதுத் தனித் திருவெண்பா: இதில் பதின் மூன்று வெண்பாக்கள் உள்ளன. - * y- - நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே-மான்கரத்தோய் அங்ங்ணமே னும் உன் அருட்பெருமைக் கிப்பெருமை எங்ங்னம்என் றுள்ளம் எழும். (4) என்பது இதன் நான்காம் பாடல். (15 தனித் திருவிருத்தம்: இஃது ஒரு தனிப்பிரபந்தம்' என்றே சொல்லலாம். ஐம்பத்தேழு திருப்பாடல்களைக் கொண்டது. பல்வேறு யாப்புகளால் ஆனது. 32. நம்மாழ்வார் செய்த திருவிருத்தம் என்னும் முதல் பிரபந்தம் என்பதுடன் ஒப்ப நோக்கத்தக்கது. அது கட்டளைக்கலித்துறை யாப்பால் மட்டிலும் அமைந்தது. இதிலோ கட்டளைக் கலித்துறை, எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம், 9