பக்கம்:சைவமும் தமிழும்.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 516 - சைவமும் தமிழும் நேசனும்நீ சுற்றமும் நீ நேர்நின்றளித்துவரும் ஈசனும்நீ ஈன்றாளுந் எந்தையும்நீ என்றேநின் தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ. இது நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா 25-வது பாடலாக வருவது. . - வைவம் என்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும் சைவம் என்பதும் சைவத்திற் சாற்றிடும் தலைமைத் தெய்வம் என்பதும் என்னன வில்லை.என் செய்வேன் (35) இது கலிநிலைத்துறை 35ஆவது பாடலாக வருவது. வள்ளலார் கொள்கையைக் குறிப்பிடுவதுபோல் அமைந் துள்ளது. (17) தனித் திருப்புலம்பல்: அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தயாப்பில் அமைந்த நான்கு திருப்பாடல் களைக் கொண்டது. கறையோர் கண்டத் தணிந்தருளும் - கருணா நிதியைக் கண்ணுதலை மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப் அேறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். கலித்துறை, கலிநிலைத்துறை, நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், நேரிசை வெண்பா, வெண்துறை முதலிய பல யாப்பு விகற்பங்களாலானது.