பக்கம்:சைவமும் தமிழும்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 517 பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம் இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே (4) என்பது இதன் நான்காம் பாடல். (22) சிவசிதம்பர சங்கீர்த்தனம்: இதில் எண்சீர்க் கழி நெடிலடிசந்த விருத்தத்தாலான ஐந்து பாடல்கள் அடங்கியுள்ளன. உலக முஞ்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபேர் உலகம் என்பதும் உலகம் இன்றி.எங் கணுநி றைந்தசிற் - கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும் இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர் * இணையில் இன்பமாம் இதயம் என்பதும் திலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம் (1) என்பது இதன் முதற்பாடல். கண்ணிகள் இத்தலைப்பில் பாங்கிமார் கண்ணி(25), வெண்ணிலாக் கண்ணி (27), முறையீட்டுக் கண்ணி (28), திருவடிக்கண்ணி (29), பேரன்புக்கண்ணி (30) என்று பல உள்ளன. யாவும் சிந்து, தாழிசை பாவகைகளில் அமைந்தவை. பொதுமக்கள் சுவைக்கத்தக்கவை. பாடியவாய் தேனுறும் பான்மையவை. இவை தவிர, சிந்து மெட்டில் அமைந்த நடேசர் கொம்மி(3), தாழிசையில் அமைந்த தோழியர் உரையாடல் (32), சிந்து மெட்டில் அமைந்த தெண்டனிட்டேன் (33, இன்னம் தயவு வரவில்லையா(34) என்ற கீர்த்தனைகளும் 32 ᏞᎧlᎢ❍frör.