பக்கம்:சைவமும் தமிழும்.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 - - சைவமும் தமிழும் மேலும் நற்றாய் கவன்றது(36), சல்லாப லகரி(37), தலைமகளின் முன்ன முடிவு (38), வேட்கைக் கொத்து(39) (தன்லமகன் பாங்கியொடு கூறல்) போன்ற அகத்துறைப் பாடல்களும் இத்திருமுறையில் அடங்கும். ஐந்தாம் திருமுறை ஆறு திருமுறைகளிலும் குறைந்த எண்ணிக்கைப் பாடல்களை உடையது இத்திருமுறை. (1) அன்புமாலை (31 பாடல்கள்) (2) அருட்பிரகாச மாலை (100 பாடல்கள்) என்ற இரு பிரபந்தங்கள் இதில் அடங்கும். பதிகங்களே பிரபந்தங்கள் எனப் போற்றத்தகும். (3) பிரசாதமாலை (0 பாடல்கள்), (4) ஆனந்த மாலை (10 பாடல்கள்) (5) பத்திமாலை (10 பாடல்கள்) (5 செளந்தர மாலை (12 பாடல்கள்) () அதிசயமாலை (14 பாடல்கள்) (8) அபராதமன்னிப்புமாலை (10 பாடல்கள்) (9 ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை (1 பாடல்கள்), (10) ஆளுடைய அரசுகள் அருண்மாலை (10 பாடல்கள்), (1) ஆளுட்ைய நம்பிகள் அருண்மாலை (0 பாடல்கள்) (12 ஆளுடைய அடிகள் அருண்மாலை (10 பாடல்கள்) என்பவையும் இத்திருமுறையில் அடங்கும். நால்வர் பற்றிய மாலைகளில் அவர்தம் அருளிச் செயல்களின் கருத்துகள் ஒரளவு பிரதிபலிக்கும். அடிகளின் பாடல்களின் நடையும் சொற்பாங்கும், பொருளமைதியும் பிறவும் இத்திருமுறைப்பாடல்களில் பிரதிபலிக்கும். விரிவஞ்சி சான்றுகள் காட்டப்பெறவில்லை இத்துடன் இத்திருமுறை நிறைவு பெறுகின்றது. ஆறாம் திருமுறை இத்திருமுறையில் சில பதிகங்களில் சில பாடல்களைக் காணலாம்.