பக்கம்:சைவமும் தமிழும்.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 519 (2) பிள்ளைச் சிறுவிண்ணப்பம்: இதில் 24 பாடல்கள் அடக்கம். தடித்தஓர் மகனைத் தந்தையிண் டடித்தால் தாயுடன் அணைப்பள்; தாய்அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப் பாஇனி ஆற்றேன் (1) என்பது முதற்பாடல். உள்ளத்தை உருக்குவது. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலானவை இப்பாடல்கள் அனைத்தும்; இதில் 24 பாடல்கள் உள்ளன. - (3) பிள்ளைப் பெருவிண்ணப்பம்: இதில் அடங்கிய பாடல்கள் 133 அனைத்தும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலானவை. தொகுப்புறுசிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில் சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்தான் கலங்கிய கலக்கம் வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம் மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ (36) இது முப்பதாறாவது பாடல். திருவளர் திரு.அம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும் உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்