பக்கம்:சைவமும் தமிழும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 சைவ சமய விளக்கு இடம் இல்லை. இவை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. அதனால் இவை அறுபான் மும்மை நாயன்மார் முதலிய திருத்தொண்டர்களது உண்மை வரலாறுகள், திருக்குறள், தேவாரம் முதலிய திருமுறைகள் போன்ற தமிழ் நூல்கள் ஆகியவற்றை முதன்மை மேற்கோள்களாகக் காட்டுகின்றன. பிரமாணம் இலக்கணம், சாதனம், பயன்' என்னும் நான்கனுள் பின்னைய இரண்டுமே இந்நூல்களில் கூறப் பெற்றுள்ளன. இவற்றுள் திருவுந்தியார்(1) முதல் நூல்.இது நாற்பத்தைத்து கலித்தாழிசையால் ஆனது. சில தாழிசைகள் திருமந்திரம் போலவும் பொருள்களைப் பிசி செய்யுள் போல் மறைத்துக் கறுவனவாய் அமைந்திருப்பதைக் காணலாம். திருக் கற்றுப்படியார் (2) திருவுந்தியாரின் வழிநூலாய் அமைந் துள்ளது. ஒவ்வொரு தாழிசையின் பொருளையும் சில வெண்பாக்களாலேயே விரித்து விளக்குனவாய் அமைந் திருப்பதைக் கண்டு தெளியலாம். இது நூறு வெண்பாக் களைக் கொண்டது. இவ்வெண்பாக்கள் யாவும் இனிய தெளிவான நடையில் செல்லுகின்றன. . மேற் குறிப்பிட்ட இரண்டைத் தவிர, சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்னும் மூன்றும், பரபக்க நோக்கில், அளவை நெறி கொண்டு ஆய்வு முறையில் தடை-விடைகளால் விளக்குகின்றன. இந்த மூன்று நூல்களிலும் பிரமாணம்,இலக்கண்ம், சாதனம் பயன் என்ற நான்கும் கூறப்பெறுகின்றன. எஞ்சிய நூல் கள் ஒன்பதிலும், இவை ஏற்ற பெற்றி கூறப் பெறு கின்றன. பிரமாணம், இலக்கணம் இந்த இரண்டும் பொது வியல்பு; சாதனம், பயன்’ என்னும் இரண்டும் உண்மை இயல்பு என்பதை ஈண்டு நீ உளங்கொள்ளல் வேண்டும். சிவஞான போதம் (3) என்னும் நூல் சித்தாந்தத்தின் தலை மணிநூல் என்பதை நீ அறியவேண்டும். பன்னி ரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்ந் நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி