பக்கம்:சைவமும் தமிழும்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 - - சைவமும் தமிழும் கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும் மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் (118) - என்பது நூற்றுப்பதினெட்டாம் பாடலாகும். (14 மாயையின் விளக்கம்: இதில் அடங்கிய பாடல் கள் பத்து. அனைத்தும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள். . தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர் தாய்கையில் கொடுத்தனை அவளோ வளர்ந்திடா வகையே நினைந்தனள் போன்று மாயமே புரிந்திருக் கின்றாள் கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும் கேட்பதற் கடைந்திலள் அந்தோ உளந்தரு கருணைத் தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க் கழகோ (2) என்பது இரண்டாம் பாடல். - (15 அபயத்திறன்: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் 28 அடங்கியவை இப்பதிகம். ஒவ்வொரு பாடலும் கைவிடேல் எனையே’ என இறுகின்றது. புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம் புகுந்தெனைக் கலக்கிய போதும் கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார் தமையும் நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே (5)