பக்கம்:சைவமும் தமிழும்.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 521 என்பது இதன் ஐந்தாம் பாடல். (20) இறைபொறுப்பியம்பல்: பத்துப் பாடல்களைக் கொண்ட இஃது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத் தாலானது. ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகற் பனைகளும் தவிர்த்தேன் வாடல்செய் மனத்தால் கலங்கினேன். எனினும் மன்றினை மறந்ததிங் குண்டோ ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன் ஐயவோ சிறிதும்இங் காற்றேன் பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் பரிந்தருள் புரிவதுன் கடனே (7) இதன் ஏழாம் பாடல் இது. (23) சற்குருமணிமாலை: இது இருபத்தைந்து பாடல் களைக் கொண்டது. பாடல்கள் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலானவை. ஒவ்வொரு பாடலும் 'தனிநடராச என் சற்குரு மணியே என இறுகின்றது. கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே அற்பனை யாண்டுகொண் டறிவளித் தறியா அருள்நிலை தனில்உற அருளிய அமுதே பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே தற்பர பரம்பர சிதம்பர நிதியே - தனிநட ராசனன் சற்குண மணியே (21) இதன் இருபத்தொன்றாம் பாடல் இது. (27) திருவருள் விழைதல்: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாலான இருபது பாடல்களைக் கொண்டது.