பக்கம்:சைவமும் தமிழும்.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 சைவமும் தமிழும் தந்தையும் தாயும் குருவும் யான்போற்றும் சாமியும் பூமியும் பொருளும் - சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும்நீ என்றே சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன். இதுநின் திருவுளம் தெரிந்தது எந்தாய் - நிந்தைசெய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின்அருட் கழகோ (8) இதன் எட்டாவது பாடல் இது. (34) அதுபோகநிலயம்: இதில் பத்துப்பாடல்கள் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் அடக்கம். ஏதும்ஒன்றறியாப் பேதையாம் பருவத் தென்னைஆட் கொண்டெனை உவந்தே ஒதும்இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என்னுயிர்த் துணைவா வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான போதகம் தருதற் கிதுதகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே (7) இதன் ஏழாம் பாடல் இது. (39) பொதுநடம் புரிகின்ற பொருள்: இது எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தத்தாலான இருபது பாடல் களைக் கொண்டது. ஒவ்வொருபாடலும் பொது நடம் புரிகின்ற பொருளே என இறுவது. அலப்பற விளங்கும் அருட்பெரும் விளக்கே அரும்பெருஞ் சோதியே சுடரே. மலர்ப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே மருந்தெலாம் பொருந்திய மணியே