பக்கம்:சைவமும் தமிழும்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 523 உலப்பறு கருணைச் செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே பொதுநடம் புரிகின்ற பொருளே (8) இதன் எட்டாம் பாடல் இது. (49) ஆனந்தாதுபவம்: பன்னிரண்டு வெண்பாக்களால் ஆனது. - கண்டேன் களித்தேன் கருணைத் திரு.அமுதம் உண்டேன் அழியா உரம்பெற்றேன்-பண்டே எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம் . தனைஉவந்து கொண்டான் தனை (9) இது ஒன்பதாம் பாடல். (55) ஆன்ம தரிசனம்: பத்துப் பாடல்களைக் கொண் டது; பத்தும் முத்தானவை. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலானவை. - களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள்.நீர் ததும்பித் துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைந்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் தெளிந்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே தெளிந்தனன் செய்கைவே றறியேன் ஒளித்திரு உளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே (3) என்பது மூன்றாம் பாடல். . (57) அருள் விளக்கமாலை: இஃது ஒர் அற்புதமான பிரபந்தம். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆனது. 100 பாடல்களைக் கொண்டது. அனைத்தும் உள்ளத்தை உருக்கும் பாடல்கள்.