பக்கம்:சைவமும் தமிழும்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 - சைவமும் தமிழும் பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே மெய்ம்மை,அறிவானந்தம் விளங்கும்.அருள் அமுதே தீர்த்தானன் றன்பர்எல்லாம் தொழப்பொதுவில் நடிக்கும் தெய்வநடத் தரசேனன் சிறுமொழிஏற் றருளே (26) கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங் கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே (39) நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்.உற வளர்த்தே ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே ஒள்ளியதென் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வெனக்கே ஆகியுற வளம்அளித்த பதியே தேன்பசித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத் திருநடஞ்செய் அரசேனன் சிறுமொழி ஏற்றருளே (49) உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்.அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும்ஒர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புத வேல் இங்கே நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே