பக்கம்:சைவமும் தமிழும்.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 525 மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில் நடம் புரியும் மாநடத்தென் அரசனேஎன் மாலைஅணிந் தருளே (71) வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது பெம்மான்னன் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற்றுணையே அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே அம்பலத்தென் அரசேனன் அலங்கல் அணிந்தருளே (76) என்பன இதில் ஐந்து பாடல்கள். அகத்துறைப் பதிகங்கள் இத்திருமுறையில் பதினாறு அகத்துறைப் பதிகங்களும் உள்ளன. அவற்றுள் இரண்டினை எடுத்துக் காட்டிப் பாடல் களையும் சுட்டுவோம். (59) பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்: இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான பத்துப் பாடல்களைக் கொண்டவை. ஊராசை உடலாசை உயிர்ப்பொருளின் ஆசை உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும் பிச்சியெனப் பிதற்றுறுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள் நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில் நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும் நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே (8) தோழி தலைவியின் பக்தி நிலையை-தலைவன்மீது கொண்டிருக்கும் பேரன்பை-நற்றாய்க்கோ பிறர்க்கோ