பக்கம்:சைவமும் தமிழும்.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 சைவமும் தமிழும் உணர்த்துவதாகக் கருதலாம். இஃது இப்பதிகத்தின் எட்டாம் பாடல். - - (60) தலைவி வருத்தம்: எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான 24 பாடல்களைக் கொண்டது இப்பகுதி. பல்வேறு விதமாகக் கவலையுறும் தலைவியின் மனநிலை களைப் பாங்குறக் காட்டுவது. - இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅதனாலோ எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன் என்றுசொன்னேன். இதனாலோ எதனாலோ அறியேன் நச்சுமரக் கனிபோலே பாங்கிமனம் கசத்தாள் நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள் அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார் அண்ணல்நடராயர்திரு எண்ணம்அறிந் திலனே (5) தாழ்குழலிர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது . தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் கூழ்கொதிப்பதெனக்கொதித்தாள் பாங்கி என்னை வளர்த்த கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள் சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார் சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே (18) என்பன இதில் இரண்டு பாடல்கள். (62) சிவபதி விளக்கம்: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான பத்துப் பாடல்களைக் கொண்டது . இப்பதிகம். ஒவ்வொரு பாடலும் வளர் சிவபதியே என்ற தொடரால் இறுகின்றது. . - நிறைவளர் முறையே முறைவளர் நிறைே நிறைமுறை வளர்பெரு நெறியே