பக்கம்:சைவமும் தமிழும்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 527 பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை தவளர்தரு புனலே துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்ந்தரு கதையே மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள் வளர்சிவ பதியே (6) என்பது ஆறாம் பாடல். (65) உபதேசவினா. கலித்தாழிசையாலான பதினொரு பாடல்களைக் கொண்டது. சின்மய வெளியிடைத் தன்மய மாகித் திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும் என்மய மாகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி (3) என்பது மூன்றாம் பாடல். - துரியத்திற் கப்பாலும் தோன்றும் பொதுவில் சோதித் திருநடம் நான்காணல் வேண்டும் கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி காணாது போய்ப்பழி பூண்பாயோ தோழி (10) என்பது பத்தாம் பாடல். அடுத்து வரும் (67-80), பதிகங்கள் பல்வேறுவகை சிந்துப் பாடல்களால் அமைந்து சுவைதரும் பான்மையனவாய்த் திகழ்கின்றன. தொடர்ந்து வருவது 1596 அடிகளில் நிலைமண்டில ஆசிரியப்பாவால் அமைந்த மிக நீண்ட அருட்பெருஞ்சோதி அகவல் ஆகும். - (134) மரணமிலாப் பெருவாழ்வு: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான 28 பாடல்களைக் கொண்டது.