பக்கம்:சைவமும் தமிழும்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 சைவமும் தமிழும் நினைந்துநினைந்துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணிரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான - நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வணைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம்.இதுவே () என்பது முதற்பாடல், அடிகள் கொள்கையின் ஊற்று வாயாக உள்ள பதிகமாகும் இது. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் வரவெதிர்கொண் டவனருளால் வரங்கள்எலாம் பெறவே தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவிர் தெரிந்தடைந்தேன் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையும் சுகத்தினைநீர்தான் அடைதல் குறித்தே (19) என்பது பத்தொன்பதாம் பாடல். பாடல்கள் யாவும் படித்தோர் உள்ளத்தோடு-ஆன்மாவோடு-பேசுபவை. (137) திருவடிப் பெருமை: இதனை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான 45 பாடல்களால் விரித்துரைக்கின்றார் அடிகள். கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம் கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும் நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்.அச் சபைக்கண் நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே