பக்கம்:சைவமும் தமிழும்.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 529 மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம வாய்ப்பதர்கள் துற்றுவதில் வரும்பயன்என் தோழி(11) என்பது பதினொன்றாம் பாடல். எம்பெருமானின் திருவடிப் பெருமை எவராலும் அறியவொண்ணாதது என்பதாம். - - காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும் கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின் மானுகின்ற இயல்கள்.பல பலப்பலவும் நடுவில் மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும் எழிற்கருணை பதிப்பெருமை இயம்புவதார் தோழி (31) என்பது முப்பத்தொன்றாம் பாடல். இறைவனின் திருவடிப்பெருமை மிகமிக நுணுக்கமாய் எந்தவித ஆய்வாலும் அறியமுடியாதிருப்பது. அகத்துறைப் பதிகங்கள் அடுத்துவரும் ஐந்து பதிகங்கள் அகத்துறைப் பதிகங் களாகும். - (138) தலைவி தலைவன் செயலைத் தாய்க்குரைத்தல்: இஃது எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பத்துக் கொண்டது. அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த அய்யர் அமுதர்என் அன்பர் அழகர் நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே பேரருட் சோதிப் பெருமணம் செய்தாள் சை.த-34