பக்கம்:சைவமும் தமிழும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 1 7 கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத் திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்தக் கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல் நூல் இது. முதற்கண் தற்சிறப்புப் பாயிர மாக அமைந்த மங்கல வாழ்த்து, அவையடக்கம் ஆகிய இரு செய்யுட்களும் பல பொருள்களைத் தம்மிடத்தே கொண்டு செறிந்துள்ளன. இதன் நூற்பாக்களைப் பல கூறுகளாகப் (அதிகரணங்களாகப்) பிரித்து ஆசிரியரே சுருக்கமான பொழிப்புரை (வார்த்திகம்) கூறியுள்ளார். இந்த உரை மேற்கோள், ஏது, எடுத்துக் காட்டு' என்னும் உறுப்புகளைக் கொண்டது. எடுத்துக்காட்டுகள் வெண் பாவால் ஆகியவை. சூசிப்பது, ருத்திரம்’ என்பதற்கு இந்நூல் சிறந்ததோர் எடுத்துக்காட்டு இலக்கியமாகும். இத்தகைய ஒப்புயர்வற்ற முழு முதல்நூலைச் செய் தருளினவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றா லும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களா லும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர். இவ்வாறு மெய்கண்டார் சந்தானம் அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் சிறந்தோங்கி நிற்கின்றது. இக்காரணங்களால் மெய்கண்ட தேவரைச் சித்தாந்தத்தின் முதல் ஆசிரியராகக் கருதுவர் சிலர். இங்ங்னம் கருதுவதற் குரிய பெருமையுடையவர் மெய் கண்டார் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை. ஆயினும், சித்தாந்தத்தை அவரே படைத்தார் என்று கருதுவது சரியன்று, மெய் கண்டாருக்கு முன்னரே திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டு சித்தாந்த நூல்கள் உள்ளன; மற்றும் ஞானாமிர்தம் முதலியனவும், சித்தாந்த சாராவளி, அட்டப் பிரகரணம் முதலிய வடநூல்களும் இருத்தலை நாம் அறிகின்றோம். ஆகவே, பரந்து கிடந்த சித்தாந்தப் பொருள்களை ஒரு கோவைப்பட அளவை முறையால் நூல் சை. ச. வி.-2 - -