பக்கம்:சைவமும் தமிழும்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 சைவமும் தமிழும் இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா (4) என்பது நான்காம் பாடல். (139 நற்றாய் செவிலிக்குக் கூறல், இஃது எழுசீர்க்கழி நெடிலடி ஆகியவிருத்த யாப்பால் அமைந்த பத்துப் பாடல் களைக் கொண்டது. சத்திய ஞான சபாபதி எனக்கே தனிப்பதி ஆயினான் என்றாள் நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப நிலைதனில் நிறைந்தனன் என்றாள் பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப் பேறேலாம் என்வசத் தென்றாள் எத்திசை யிரும் ஒத்திவண் வருக என்றனள் எனதுமெல் லியலே (4) என்பது நான்காம் பாடல். (40) தோழிக்குரிமை கிளத்தல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப்பாடல்களைக் கொண்டது இப்பதிகம். - மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துர்ைக்க இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால் எண்ணம்இலாதிருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும் வயங்கும்.இவர்க் குபகரிக்கும் மதத்தலைவர் களுக்கும் அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே ஆடில்அடிப் பணிக்கென்றே அமைந்தகுடி அறியே (5) என்பது ஐந்தாம் பாடல்.