பக்கம்:சைவமும் தமிழும்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 531 (4) தலைவி கூறல்: எண்சீர்க் கழிநெழிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்கள் இதில் அடக்கம. என்னைமண மாலையிட்டார் என்னுயிரில் கலந்தார் எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இம்புகநம் தலைவர்வரு தருணம் மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து

  • மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஜயம் அடையேல் தன்நிகர் தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே (6)

என்பது ஆறாம் பாடல். (142) அநுபவ மாலை: இதில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த நூறு பாடல்கள் அடங்கியுள்ளன. - அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முதுடிமேல் அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன் எம்பரத்தே மணக்கும்.அந்த மலர்மணத்தைத் தோழி என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன்றதுவே வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன் மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண் நம்புறுபார் முதல்நாத வரையுள்நாட் டவரும் நன்குமுகத் தளர்வியத்தார் நன்மணம் தெனவே (1) தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைளங் கணவர் பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போதெல்லாம் புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி என்வடிவில் பொங்குகின்ற தம்மாளன் உள்ளம் இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்