பக்கம்:சைவமும் தமிழும்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 - சைவமும் தமிழும் முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே (32) , என்பன இதில் இரண்டு பாடல்கள். (144 சத்திய அறிவிப்பு: இதில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான நான்கு பாடல்கள் அடக்கம். தனித்தலைமைப் பெரும்பதினன் தந்தைவரு கின்ற தருணம் இது சத்தியம்காண் சகதலத்தீர்கேண்மின் இனித்தநறும் கனிபோன்றே என்னுளம்தித் திக்க இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகம் போற்ற மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே கணித்தசிவா னந்தம்எனும் பெரும்போகம் தனிலே களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே (2) என்பது இதன் இரண்டாம் பாடல். இப்பகுதியுடன் ஆறாம் திருமுறை நிறைவு பெறுகின்றது. உரைநடைப்பகுதி அருட்பிரகாச வள்ளலார் அருளிய உரைநடைநூல்கள், வியாக்கியானங்கள், மருத்துவக் குறிப்புகள், உபதேசங்கள், திருமுகங்கள், அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள், விண்ணப்பங்கள்-இப்பகுதியுள் அடங்கும். 3. தண்டபாணிஅடிகள் (1839-1898) திக்கெலாம் புகழும் திருநெல்வேலிச் சீமையிலே 1839-இல் தோன்றியவர். தந்தையார் செந்தில்நாயகம் பிள்ளை; தாயார் பேய்ச்சிமுத்தம்மையார். அடிகளா ருக்கு இடப்பெற்ற பிள்ளைத் திருநாமம் சங்கரலிங்கம் என்பது பிறந்து முதல் அழுதரற்றுதல் முதலிவைகளின்றிக் குழந்தை வாளா கிடந்தது கண்டு கண்டோர். குழவி