பக்கம்:சைவமும் தமிழும்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் . 533 பிழைக்குமோ என்று ஐயுற்றனர். தந்தையார் கனவில் முழுமுதற்கடவுள் தோன்றி திருநீற்றையும் செவ்வந்திமலர் ஒன்றையும் தந்து “குழந்தைக்குச் சங்கரலிங்கம் என்று பெயரிட்டு அழைப்பாயாக அங்ங்னம் செய்தபின் குழந்தை சிறப்புடன் விளங்கும்” என்று திருவாய்மலர்ந்து மறைந் தருளினார். கண் விழித்த செந்தில்நாயகம்பிள்ளை கையில் திருநீற்றையும் மலரையும் கண்டு நீற்றைக் குழந்தைக்கு அணிந்து சங்கரலிங்கம் என்று பெயரிட்டார். ஐந்தாண் டில் குழந்தையைப் பள்ளியில் சேர்ந்தனர். ஆறாம் ஆண் டின் இறுதியில் தந்தையார் விண்ணுலகேகினார். செந்தில் நாயகத்தின் நண்பர் சீதராம நாயகர் என்பார் குழந்தை யைக் கவனித்து ஆவன செய்தலை மேற்கொண்டார். திருமகள், ஆனை முகக்கடவுள் முதலிய கடவுளரின் அரு மறையையும் வழிபாட்டு முறையையும் சங்கரலிங்கத்துக்குக் கற்பித்தபிறகு முருகப்பிரானது ஆறெழுத்து மந்திரத்தையும் வேல்வழிபாட்டு முறையையும் போதித்தார். பின்னர் பெரிய அன்னையார் ஊராகிய சுரண்டையை அடைந்து கல்வி கற்றார். செய்யுள் இயற்றல் தாம் தங்கியிருந்த ஊரில் உள்ள அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனின் 1. ஆழ்வார் திருநகரியில் பிறந்த நம்மாழ்வாரும் பிறந்தபோது இந் நிலையில் இருந்ததாக வரலாறு. திருக்குறுங்குடி நம்பி யின் திருவருளால் அவதரித்த திருக்குழந்தை அழுதரற்றுதல் பால் பருகல் முதலான இயல்பு ஒன்றுமில்லாது கிடந்த குழந் தையைப் பெற்றோர்கள் உள்ளுர் ஆதிநாதப் பெருமாளைச் சேவிக்கச் செய்து அவர்திருமுன் இட, அது அத்திருக் கோயிலுள்ள புளியமரத்தடியில் சென்று அமர்ந்தது. 'சட கோபன் என்று திருநாமம் இட்டு வளர்த்து வந்தனர் பெற்றோர். பதினாறாண்டுவரை பேச்சின்றி வளர்ந்து வந்தது. இப்படிச் செல்கிறது. இவர் வரலாறு. இஃது ஈண்டு நினைக்கத் தக்கது.