பக்கம்:சைவமும் தமிழும்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 சைவமும் தமிழும் பெயர் பூமிகாத்தாள் என்பது அப்பெயர்க்காரணம் ஒரு வருக்கும் தெரியவில்லை. அந்நாளில் இவருக்கு அகவை எட்டு. சங்கரலிங்கத்துக்கும் தெய்வத்திருவருள் உண்டா யிற்று. அம்மனுடைய பெயர்க்காரணம் ஒரு வெண்பா வால் இவருடைய உள்ளத்தில் எழுந்தது. உடனே இவர், அமுதங் கடையுநாள் ஆலம் வெடித்துத் திமுதமெனத் தீயெரித்துச்சென்ற-தமுதமெனத் தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக் காத்ததனால் பூமி காத்தாள். - என்று பாடி அதன் பொருளையும் விளக்கினார். சில காலம் கழித்து நெல்லைக்குச் சென்று தாம் இயற்றிய பாடல்களை சீதாராம நாயருக்குக் காட்ட, நாயகர் மகிழ்ந்து கொண்டாடினர். துறவுக்கோலம் நாட்கள் பல சென்றபின் வள்ளியூர் மலைக்குச் சென்றவர் முருகனை வணங்கிப் பலபாடல் களைப் பாடினார். கல்லாடையும் இலங்கோடு கெளபீனத் தையும் திருமுன்பு வைத்து வழிபாடு செய்து அவற்றைத் தாமே எடுத்து அணிந்து கொண்டார். பின்னர் நெல்லையை அடைந்து தவம் புரிந்து கொண்டிருந்தார். திருச்செந்தில், திருவுருமாமலை முதலிய பதிகட்குச் 'சென்று நூல்கள் பலஇயற்றினார். பல திருப்பெயர்கள்: சங்கரலிங்கம் அவர்களின் பல் வேறு செயற்பாடுகளினால் பல பெயர்களால் வழங்கப் பெற்றார். () முருகதாசர்: சங்கரலிங்கனாரின் முருகவழிபாடு, அன்பு முதலிய பெருமைகளை உணர்ந்த உலகினர். முருக தாசர் என்ற ஒரு திருநாமத்தை வழங்கினர்; சிலகாலம் தாம் செய்துவந்த சிறுதெய்வ வழிபாடுகளுக்காக வருந்தி,