பக்கம்:சைவமும் தமிழும்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 535 எல்லாவற்றையும் முருகனுக்கே உரியதாக்கி அப்பெருமா னையே உறுதியுடன் வழிபட்டார். முருகன் காட்சி தராததால் தாமிரபரணியாற்றின் நடுவில் உள்ள முருகன் திருக்கோயிலில் தம் பாடல்கள் எழுதிய பெட்டியை வைத்து விட்டு தாம் திருமலை என் னும் திருப்பதிக்குச் சென்று நெல்லை மாவட்டத்திலுள்ள மலை) முருகனை வணங்கிச் சில பாடல்களை கூறி பிறகு வடக்கில் தலைவைத்து உடலை மலையிலிருந்து உருட்டி விட்டார். உடலுக்கு எத்தகைய ஊறுபாடும் உண்டாக வில்லை. கற்களில் உராய்ந்ததனால் சிறுசிறு காயங்களே ஏற்பட்டன. வடிந்த குருதியில திருநீற்றைப் பூசி மறைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியை மெய்பிப்பதாக அடிகளாரின், வடதிசையில் தலைவைத்து மறலிதிசைக் கால்நீட்டி உடலையந்தத் திருமலையில் உச்சியினின் றுருட்டிவிட்டேன் விடலையிடும் தேங்காய்போல் வேறுபட்டுச் சிதறாமல் மடமடெனக் கொண்டங்கோர் மண்தரையில் தங்கியதே. என்ற பாடல் அகச் சான்றாக அமைகின்றது. ஒரு சைவ வேளாள அன்பர் அடிகளின் உடற்காயங்கள் ஆறுதற்குத் தக்க மருந்துகள் செய்தனர். புண்கள் பெரும்பாலும் ஆறின. நெல்லைக்குத் திரும்பியபோது ஆற்றில் வைத்த பெட்டியி லுள்ள ஏடுகளை நீர் அடித்துக் கொண்டு சென்றதைக் கண்டார். கையிலிருந்த ஏடுகளையும் கிழித்தெறிந்து விட்டார். ஒருநாள் அடிகள் அறிதுயிலில் அமர்ந்திருந்த பொழுது வள்ளியம்மை ஒரு குறப்பெண் வடிவில் தோன்றி அடிகளின் நெற்றியிலும் வாயிலும் திருநீறையிட்டு இடத் தோளில் இருந்த புண்ணில் நீற்றை அப்பிவிட்டு மறைந்தனர். -