பக்கம்:சைவமும் தமிழும்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 - சைவமும் தமிழும் (2) திருப்புகழ் சுவாமிகள்: அடிகள் அருணகிரி நாதர் பாணியில் முருகன்மீது சந்தம் அமைந்த பாடல்களைக் கணக்கில்லாமல் பாடியதனால் 'திருப்புகழ் சுவாமிகள்' என்றும் பெயர் உண்ட்ாயிற்று. (3) தண்டபாணி அடிகள்: அடிகள் திருநீற்றை உட லெங்கும் பூசி வெள்ளையாடையால் இலங்கோடு. கெள பீனம் அணிந்து இடுப்பில் சிறிய கல்லாடையைச் சுற்றிக் கொண்டு கையில் தடியொன்று பிடித்துக் காட்சி அளித்த தைக் கண்டவர்கள் பழநி முருகனை நினைந்து தண்ட பாணி அடிகள் என்ற பெயரை வழங்கினர். இதுவே அடிகளின் நிரந்தரப் பெயராகப் பெருவழக்காகி விட்டது. (4) வண்ணச் சரபம்: வண்ணப் பாடல்களை எண்ண முடியாத அளவிலும் வேறொருவரும் பாடமுடியாத வகையிலும் வெகுவிரைவாகவும் வியக்கத்தக்க வகையிலும் பாடியமையால் வண்ணச் சரபம் என்னும் திருப்பெயர் உண்டாயிற்று. இப்பெயர்கள் தோன்றவே சங்கரலிங்கம் என்று பெற்றோர் இட்ட பெயர் அடியோடு மறைந்து போய் விட்டது. <r. பலதலங்கள் சுற்றல்: அடிகளார் தம் வாழ்நாளில் பல தலங்களை வழிபட்டும், பலநூல்கள் இயற்றியும் பெரும் பாலும் அவற்றை அரங்கேற்றச் செய்தும் காலங்கழித்தார். சிலதலங்கள்மீது சிலபாடல்கள்: கந்தகோட்டம் முருகன்மீது: சென்னையை அடைந்த அடிகள் சென்னைப்பிள்ளைத் தமிழ், சென்னைக் கந்தர் இதழகலந்தாதி, திருப்புகழ், வண்ணம் முதலிய வைகளைப் பாடினார். தாம் பட்ட கடனுக்கு முருகன் பொருள் தருவான் என்று நம்பினார்; நம்பிக்கை வீண் போயிற்று. இதனால் மனம் நொந்த அடிகள்,