பக்கம்:சைவமும் தமிழும்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 537 சென்னைநகரக் கந்தா நீ செட்டிகளைச் சேர்ந்தாலும் உன்னை ஊதாரியென்றே எண்ணினேன்-என்னையவ்வா றேமாறச் செய்தன்ையே இன்னுமென்ன செய்வாயென் பாமாலைச் சொற்கள்கசப் பா. - என்ற வெண்பாவைப் பாடினார். திருவொற்றியூர் காளிமீது: திருவொற்றியூர் இறைவன் மீது பதிகங்கள் பாடினார். கோயிலை வலம்வரும்போது வட்டப்பாறை நாச்சியாரைக்கண்டு அவள் கொலைப் பூசையை விரும்புபவள் என்று அறிந்து. ஒற்றியூர்க் காளி உனக்கேனோ ஊன்விருப்பம் வெற்றிமழு வானருட்சீர் வேண்டாவோ-சிற்றுயிரைக் கொல்வார்க்கும் இன்பம் கொடாதான் அவன்கண்டாய் நல்வார்த்தை சொன்னேன்இந் நாள். என்னும் வெண்பாவைப் பாடினார். திருவண்ணாமலையில் அடிகள் தன்முற்பிறப்புத் தன்மையை அறிந்து கொள்ள விழைந்தார். ஒரு நாள் முருகன் அடிகளின்கனவில் தோன்றி. "நீ அருணகிரியின் ஒரு கூறாக இவ்வுலகில் தோன்றியுள்ளாய்; அதைக் குறித் துச் சிறிதும் ஐயப்படாதே" என்று கூறி மறைந்தருளினான். இச்செய்தியை அடிகள், வல்லைவந் தன்பரைக் காக்குஞ்செவ் வேற்கை வரதனைக்கண் டெல்லையில் வாக்களிப் பாய்மடி மீதிலிருக்கும் என்னை தொல்லை அருணகிரிதானென் றன்னவன் சொன்ன துண்மை - இல்லையென் றாற்குமுக் கென்று வெங் கோடை யிடிவிழுந்தே.