பக்கம்:சைவமும் தமிழும்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 சைவமும் தமிழும் என்னும் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணா மலையில் அடிகள் இருந்தபோது தலையில் பொடிப்பு என்னும் சிறு சிரங்கால் தொல்லைப்பட்டார். முருகனின் இந்தத் திருவிளையாடலைப் பிடிக்காத அடிகள், கோதுபடாத் தென்னருணைக் கோபுரத்து வேளுறவு போதும்போ தும்போதும் போதுமே-வாதுசெயும் பொல்லார் பகையும் பொடிப்புநோ யுங்கொடுத்தான் நல்லானா னாற்பார்க்க லாம். என்ற செய்யுள் பாடினார். கேரளத்தில்: கேரளம் சென்று அங்குப் பல சந்தர்ப்பங் களில் பல பாடல்கள் பாடியுள்ளார். கேரளத்தில் இருந்த போது ஒருநாள் பட்டினியாக இருக்க நேர்ந்தது. திருமாலே ஒர் அந்தணனாகத் தோன்றி அமுதளித்துச் சென்றார். அடிகள் அந்நிகழ்ச்சியைப் பாராட்டி, குருவனப்பும் கண்டறியார் கொச்சிவள நாட்டில் பெருவளத்தில் என்னையன்பிற் பேணி-அருமையுடன் அன்னங் கொடுக்கவந்த அந்தணனே அந்தவண்ணஞ் சொன்னங் கொடுக்கவொண்ணா தோ. - என்ற பாடல் பாடினார். ஒருவன் செய்ய இருந்த உயிர்ப்பலியைத் தடுத்தது, அரவு கடியுண்ட பெண்ணை கருடன் துதிபாடி தீர்த்தது, மக்கட்பேறின்றி வருந்தும் ஒருவருக்கு மக்கட்பேறு உண்டாகுமாறு செய்தல்-போன்ற பல நிகழ்ச்சிகள் பாடல்களைத் தந்துள்ளன. தில்லைத் திருவாயிரம் பாடி கூத்தப்பெருமானைப் போற்றினார். நூலும் அரங்கேற்றப்பெற்றது. இங்ங்னமே அரங்கநகர் அப்பன்மீதும் திருவரங்கத் திருவாயிரம்’ பாடி அரங்கேற்றமும் செய்யுள்ளார். -