பக்கம்:சைவமும் தமிழும்.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் c 539 திருவாமாத்துாரில் வீடுபேறு: திருவாமாத்துரர் அடிகளுக்குப் பிடித்தமானதலம். அவ்விடத்தில் திருமடம் ஒன்று அமைத்துக் கொண்டு ஆறெழுத்து மந்திரத்தைக் கோடிக் கணக்கில் உருவேற்றிக் கொண்டிருந்தார். இதன் கடுமை சூட்டுநோய் தந்தது. தொல்லைக் கஞ்சி அடிகள் தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. 1898-இல் ஆணித்திங்கள் 23 ஆம் நாள் திருவோணத்தில் தமது நாற்பத் தொன்பதாம் அகவையில் முருகப் பெருமானின் திருவடிவ நீழலை அடைந்தார். அடிகளின் தொண்டர்கள் அடிகளின் திருவுடலைச் சமாதித்து வைத்துத் திருக்கோயில் திருமடம் முதலியன அமைத்து வழிபாடாற்றி வருகின்றனர். அடிகள் காலத்திய அறிஞர்கள்: அடிகள் வள்ளல் பெருமானைப் பலமுறை கண்டு அளவளாவியுள்ளார். ஆறுமுக நாவலர், மகாவித்துவான் மாம்பழக்கவிச் சிங்க நாவலர், மகாவித்துவான் காஞ்சி சபாபதி முதலி யார், அவருடைய மாணவர் அட்டாவதானம் சபாபதி முதலியார், பூவை கலியாணசுந்தர முதலியார் முதலிய பலர் அடிகள் காலத்திய அறிஞர்களாவர். தண்டபாணி அடிகள் நூல் அரங்கேற்றம் ஒன்றைச் செய்துவிட்டு அடியார் குழாத்துடன் தெருவில் வந்து கொண்டிருந்த போது பூண்டி அரங்கநாத முதலியார் என்னும் பேரறிஞர் அடிகளைத் தெருவில் கண்டு கிழே விழுந்து வணங்கித் திருநீறு பெற்றுச் சென்றனர். அழுக்காறு கொண்ட சில புலவர்களும் இருந்தனர். * . . படைப்புகள்: அடிகளால் இயற்றப்பெற்ற நூல்கள் கிழித்தெறிந்தவை போக இப்போது எஞ்சியிருப்பவை 82 ஆகும். - 2. பட்டியலை-தமிழ்ப்புலவர் வரிசை ஐந்தாம் புத்தகம் (பகுதி-2) Bostos. - - -