பக்கம்:சைவமும் தமிழும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዝ 8 சைவ சமய விளக்கு முறைப்படிச் செய்தருளினவர் மெய் கண்டார்” என்பதை நாம், ஒப்புக் கொண்டேயாக வேண்டும், இதனால் இது "சித்தாந்த முதல் நூல்’ என்று போற்றப் பெறுகின்றது என்பதை அறிவாயாக. இதன் பெருமையைத் திருக் குறள் ஆகிய வேதம் பசு, திருமூலர் திருமந்திரம் ஆகிய ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர். மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திரு முறைகள் அப்பாலி ன் நறுநெய், மெய் கண்டார் இயற்றிய சிவஞான போதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்.' என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர் என்பதனையும் ஈண்டு நீ அறிவாயாக. இந்த அரிய நூலுக்கு மாதவச் சிவஞான யோகிகள் கசிற்றுரை, பேருரை என இரண்டு உரைகள் செய்துள்ளர். பேருரை பாடியம் (பாஷ்யம்)" என வழங்கப்பெறு கின்றது. இவ்வுரைகளின்றி இந்நூற் பொருளை உணர்தல் இயலாது. மாபாடியத்துள் சித்தாந்தப் பொருள் பலவற் றையும் நுணுக்கமாக விளக்கியிருக்கும் அருமைப்பாட்டைக் காணலாம். இவற்றைத் தெளிவாக உணர்வதற்குச் சிறந்த தமிழறிவும், ஒரளவு வடமொழியறிவும், அளவை நூல் பயிற்சியும் வேண்டும் என்பது என் கருத்து. சிவஞான சித்தியார் (4) சிவஞான போதத்தின் பொருளை மிக விரித்துச் செய்யப்பெற்ற வழிநூலாகும். சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் இதுவே மிகப் பெரிய நூலாகும். இது பரபக்கம், சுயக்கம்’ என்னும் இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. இரண்டையும் இருவேறு நூல்கள் என்று கருதும் அளவுக்கு மிகப் பெரிய நூல். பரபக்கம் 301 திருவிருத்தங்களையும் சுபக்கம் 323த் திரு 21. இராமாநுசர் வைணவ நெறியை முறை படுத்தினதை ஈண்டு நினைத்தில் தகும். 22. இராமாநுசர் பாதராயனரின் பிரம்ம சூத்திரத்திற்கு வகுத்துள்ள பூரீ பாஷ்யம் ஈண்டு நினைக்கத் தகும்,