பக்கம்:சைவமும் தமிழும்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 အေဗ၈ဖျားခံ தமிழும் 4. சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்திலுள்ள எட்டய புரத்தில் 1882-இல் பிறந்தார். தந்தையார் சின்னசாமி அய்யர்; தாயார் இலட்சுமி அம்மாள். சிறுவயதில் தமிழில் தேர்ச்சி பெற்றிருந்த தம் தந்தையிடம் சிறிது காலம் கற்றார். சிறிது காலம் இந்துக் கல்லூரியில் கற்றார். தந்தையின் மறைவால் கல்லூரிப் படிப்பு நின்றது. தம் அத்தையாருடன் காசிக்குச் சென்று அலகபாத் பல்கலைக் கழகத்தில் புகுமுக வகுப்பில் சேர்ந்து பயின்று அத்தேர்வில் வெற்றி பெற்றார். 12-ஆம் வயதில் திருமணம் மனைவி செல்லம்மாள். இவர்தம் சுயசரிதையில் வாழ்க்கைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி யில் சில மாதங்கள் தமிழாசிரியர் பணி. சென்னை வந்து சுதேசமித்திரன் நாளிதழில் சிலகாலம் துணையாசிரியர் பணி. இந்தியா என்னும் செய்தி இதழ் தொடங்கி உணர்ச்சிபொங்கும் கட்டுரைகள் வரைந்து வான்புகழ் பெற்றார். தேசபக்தியால் ஈர்க்கப்பெற்றார். சிறிது காலம் சிறைவாசம். புதுவையில் பத்தாண்டுக் காலம் வாசம். அங்குதான் சுதந்திர உணர்ச்சி ஊட்டும் பாடல்களை எழுதிக் குவித்தார். இவர்தம் 'குயில்பாட்டு இங்குதான் தோன்றியது. முறையாகத் தமிழ்க்கல்வி பயிலாவிடினும் எப்போதும் கவிதைக் கடலில் மிதந்து கொண்டிருப்பார். தமிழ்க் கவிதை யின் உயிரொளியை அள்ளிப்பருகியிருந்தார். தமிழ்ப் பண்பு அவர் உடன் பிறப்பு. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல் கவிதை பொழியும் திறனை பாரதியார் சிறுவயதிலேயே அருளாகப்பெற்றார். இராம லிங்கஅடிகட்குப் பிறகு தோன்றிய இசைக்கவி இப்பெரு மகனாரேயாவர். இராமலிங்க அடிகள் கடவுள் பக்தியால் தம்மிடம் உதித்த உணர்ச்சியைக் கவிதைப் பொருளாகக் கொண்டு இசைநிறைந்த பாடல்களைப் பழைய முறைகளை