பக்கம்:சைவமும் தமிழும்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 541 அதுட்டித்தும் சில புதிய காவிய உறுப்புகளைக் கையாண் டும் பாடிக் குவித்தார். பாரதியாரின் கவிதாசக்தி கனிந்த நாட்டுப்பற்றான அமுதக்கடலில் பிறந்து நவீன நாகரிக மான வானின் ஒளியைப் பருகி மலர்ந்தது. இங்ங்னம் பாடிக் குவித்த கவிஞர் 1921-இல் செப்டம்பர் 1-இல் புகழுடம்பை விட்டுப் பூத உடம்பைத் துறந்தார். இவர்தம் படைப்புகளை தேசீய கீதங்கள், தோத்திரங்கள், வேதாந்தப்பாடல்கள், காவியங்கள், தனிப்பாடல்கள் என்று வகைப்படுத்திப் பலர் வெளியிட்டுள்ளனர். பாரதியார் பாடல்கள்: இவற்றில் தோத்திரப் பாடல்கள் என்ற பகுதியில் சைவம்பற்றிய பாடல்கள் காணப் படுகின்றன. இவற்றை () யாப்புவழி அமைந்த பாடல்கள். (2) இசைப்பாடல்கள் (கீர்த்தனைகள்) என்ற இரண்டு வகையாகப் பிரித்து நோக்கலாம். () யாப்பு வழியில்: இவ்வகையில் அமைந்தவற்றை முதலில் காண்போம். (அ) விநாயகர் நான்மணிமாலை: இது பல்வேறு யாப்பு களில் அமைந்த நாற்பது பாடல்களைக் கொண்டது. அந்தாதித் தொடையில் அமைந்தது. புதுவை மணக்குளத்து விநாயகர்மீது அமைந்தது. சில பாடல்களைக் காண்போம். காலைப் பிடித்தேன் கணபதி நின்பதம் கண்ணிலொற்றி நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன் கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே (6) இது கலித்துறையால் அமைந்தது.