பக்கம்:சைவமும் தமிழும்.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 சைவமும் தமிழும் எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி, மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளேதோன்றாமல், நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறுவயது - இவையுந் தரநீ கடவாயே (7) இது அறுசீர் விருத்தத்தால் அமைந்தது. - மேன்மைப் படுவாய் மனமேகேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே, - பயத்தால் ஏதும் பயனில்லை யான்முன்உரைத்தேன் கோடிமுறை இன்னும் கோடி முறைசொல்வேன், ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே (23) இது விருத்தயாப்பில் அமைந்தது. - நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதும் சோரா திருத்தல்-உமைக்கினிய மைந்தன் கனநாதன் நங்குடியை வாழ்விப்பான் சிந்தையே இம்மூன்றுஞ் செய் (25) இது வெண்பாவில் அமைந்தது. மொய்க்குங் கவலைப் பகைபோக்கி முன்னோன் அருளைத் துணையாக்கி, எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி உடலை இரும்புக் கிணையாக்கிப் பொய்க்குங் கலியை நான்கொன்று, பூலோ கத்தார் கண்முன்னே,