பக்கம்:சைவமும் தமிழும்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த மாரு தத்தில்-வானில் மலையினுச்சி மீதில் சிந்தை யெங்கு செல்லும்-அங்குன் செம்மை தோன்றும் அன்றே! (2) ஞாயி றென்ற கோளம்-தருமோர் நல்ல பேரொ ளிக்கே தேய மீதோர் உவமை-எவரே தேடி யோத வல்லார்? வாயி னிக்கும் அம்மா- அழகாம் மதியின் இன்ப ஒளியை நேய மோடு ரைத்தால்-ஆங்கே நெஞ்சி ளக்கம் எய்தும் (6) (37 ஏ. காளி என்ற தலைப்பிலும் இரண்டு பாடல் கள் உள்ளன. (38) மகாகாளியின் புகழ்' என்ற தலைப்பில் "காவடிச் சிந்து மெட்டில் மூன்று பாடல்கள் உள்ளன. இவற்றில், - காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது காளிசக்தி என்றபெயர் கொண்டு-fங் காரமிட் டுலவுமொரு வண்டு-தழல் காலும்விழி நீலவண்ண மூலஅத்து வாக்களென்னும் கால்களா றுடையதெனக் கண்டு-மறை காணுமுணி வோருரைத்தார் பண்டு. மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த வித்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம் (1) என்பது இதன் முதற் பாடல்.