பக்கம்:சைவமும் தமிழும்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 545 (40) முத்துமாரி என்ற தலைப்பில் நான்கு பாடல் களும், (4) தேச முத்துமாரி என்ற தலைப்பில் ஏழு கண்ணிகளும் உள்ளன. இவற்றுள், தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரீ! கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரம் தருவாய் (1) நம்பினார் கெடுவதில்லை; நான்குமுறை தீர்ப்பு அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் (7) என்பன இரண்டு கண்ணிகள். (42) கோமதியின் மகிமை என்ற தலைப்பிலுள்ள எட்டுப் பாட்டில்கள் (எட்டாவது முற்றுப் பெறவில்லை) 'சங்கர நயினார் கோயில் ஆவுடையம்மையின் புகழ், சிவபிரான் தானும் மாலும் ஒரு பொருளென்றுணர்த்தி ஒரு வடிவு காட்டிய சரித்திரம் (வானவில் பிரசுரம், சென்னை-600 035) என்பதாகும். இவை யனைத்தும் அற்புத மான பாடல்கள்; அறிவியல் பார்வையில் அமைந்தவை. தாருக வனத்தினிலே-சிவன் சரணநின் மலரிடை யுளம்பதித்துச் சீருறத் தவம்புரிவார்-பர சிவன்புக ழமுதினை அருந்திடுவார் பேருயர் முனிவர் முன்னே-கல்விப் பெருங்கடல் பருகிய சூதனென்பான் தேருமெய்ஞ் ஞானத்தினால்-உயர் சிவணிகர் முனிவரன் செப்புகின்றான்; (i) என்று முதற்பாடல் தொடங்குகிறது. விரிவஞ்சி அனைத் தும் விடப்பெற்றன. அன்பர்கள் அவற்றைப்படித்து சிவன்பெருமையை உணர்வார்களாக, (2) காணிநிலம் என்ற தலைப்பிலுள்ள பாடல். காணி நிலம் வேண்டும் என்று தொடங்கி பராசக்தியை வேண்டுகிறார் பலவற்றை. இறுதியர்க, சை.த-35