பக்கம்:சைவமும் தமிழும்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 . சைவமும் தமிழும் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித் திடவேணும் - என்று வேண்டி தன் ஆசையையும் நிறைவு செய்கின்றார். (1) மகாசக்தி வெண்பா இத்தலைப்பில் நான்கு பாடல்கள்-வெண்பா யாப்பில் அமைந்தவை. இரண்டு ஈண்டுத் தரப்பெறுகின்றன. தன்னை மறந்து சகல உலகினையும் . மன்ன நிதங்காக்கும் மகாசக்தி-அன்னை அவளே துணையென்று அனவரதம் நெஞ்சந் துவள திருத்தல் சுகம் (1) - நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி, அஞ்சி யுயிர்வாழ்தல் அறியாமை; தஞ்சமென்றே வையமெலாங் காக்கும் மகாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு (2) (8) ஓம்சக்தி என்ற தலைப்பில் நான்கு பாடல்களும் (50 பாராசக்தி என்ற தலைப்பில் ஐந்து பாடல்களும் உள்ளன. Aę. - (13) நல்லதோர் வினை என்ற தலைப்பில் இரண்டு பாடல்கள்; விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன், நசையறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன். தசையினைச் தீச்சுடினும்-சிவ சக்தியைப் பாடுநல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன், -இவை அருள்வதில் உனக்கெதுந் தடையு ளதோ? (2) என்பது அவற்றுள் இரண்டாம் பாடல்