பக்கம்:சைவமும் தமிழும்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 547 (2) சக்தி என்ற தலைப்பில் மூன்று பாடல்கள். இவை எண்சீர்கள் கொண்ட புதியவகைப் பாடல்கள் இவற்றுள், வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் வலியே சக்தி தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சல்ம் நீக்கும் தவமே சக்தி வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணை யளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி (3). என்பது மூன்றாம் பாடல். (22) வைய முழுதும் என்ற தலைப்பிலுள்ளவை ஏழு கண்ணிகளைக் கொண்டவை. இவற்றுள் மூன்று இவண் காட்டப் பெறுகின்றன. . வைய முழுதும் படைத்தளிக் கின்ற மகாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம்; செய்யும் வினைகள் அனைத்திலு மேவெற்றி சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே (1) உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந் தோங்கிடும் சக்தியை ஒது கின்றோம்; பயிரினைக் காக்கும் மழையென எங்களைப் பாலித்து நித்தம் வளர்க்க வென்றே (4) சித்தத்தி லேநின்று சேர்வ துணரும் - சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம்; இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே (5) (23) சக்தி விளக்கம் என்ற தலைப்பில் ஏழு பாடல்கள்: அவற்றுள், .