பக்கம்:சைவமும் தமிழும்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 சைவமும் தமிழும் ஆதிப் பரம்பபொருளின் ஊக்கம்-அதை அன்னை-யெனப்பணிதல் ஆக்கம்; சூதில்லை காணுமிந்த நாட்டீர்-மற்றத் தொல்லை மதங்கள் செய்யுந் தூக்கம் (1) மூலப் பழம்பொருளின்நாட்டம்-இந்த மூன்றுபுவியும்தன் ஆட்டம்; காலப் பெருங்களத்தின் மீதே-எங்கள் காளி நடமுலகக் கூட்டம் (2) ஆதி சிவனுடைய சக்தி-எங்கள் அன்னை அருள்பெறுதல் முக்தி; மீதி உயிரிருக்கும்போதே-அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி (5) மூர்த்திகள் மூன்று பொருள்ஒன்று; அந்த மூலப் பொருள்ஒளியின் குன்று; நேர்த்தி திகழுமந்த ஒளியை-எந்த நேரமும் போற்றுசக்தி யென்று (7) என்பவை மூன்று பாடல்கள். (25 சக்தி திருப்புகழ் என்ற தலைப்பில் ஒருபுகழ் மாலை. இதில் ஒன்பது பாடல்கள்-மின்வெட்டுபோல. சக்திசக்தி சக்திசக்தி சக்திசக்தி யென்றோது சக்திசக்தி சக்தியென்பர்-சாகாரென்றே நின்றோது (1) சக்திசக்தி என்றேவாழ்தல் சால்பாம் நம்மைச்சார்ந்திரே சக்திசக்தி யென்றிராகில்-சாகா உண்மைசேர்ந்திரே (2) சக்திசக்தி யென்றால் துன்பம்-தானேதீருங் கண்டீரே சக்திசக்தி யென்றால்இன்பம்-தானே சேருங் கண்டிரே(6) சக்திசக்தி வாழியென்றால்-சம்பத்தெல்லாம் நேராகும் சக்திசக்தி யென்றால் சக்தி-தாசன்என்றே பேராகும் (9)