பக்கம்:சைவமும் தமிழும்.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 549 (33) மகா சக்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள். பஞ்சகம்-ஐந்து கொண்டது. கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன் காளிநீ காத்தருள் செய்யே; மரணமும் அஞ்சேன், நோய்களை யஞ்சேன்; மாரவெம் பேயினை யஞ்சேன் இரணமும் சுகமும், பழியுநற் புகழும் - யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்; சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்; தாயெனைக் காத்தலுன் கடனே (1) என்பது முதல் பாடல். (34) மகாசக்தி வாழ்த்து என்ற தலைப்பிலும் ஆறு பாடல்கள். இவற்றின் பாணியே தனி. இயற்கை அனைத் துமே சக்தியாகக் காண்கின்றார் கவிஞர். விண்டு ரைக்க அறிய அரியதாய் விரிந்த வான வெளியென நின்றனை; அண்ட கோடிகள் வானில் அமைத்தனை, அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை: மண்ட லத்தை அனு:அணு வாக்கினால் வருவ தெத்தனை யத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை, கோல மேநினைக் காளியென் றேத்துவேன். (1) பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை, பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை; கரிய மேகத் திரளெனச் செல்லுவை; காலு மின்னென வந்துயிர் கொல்லுவை; சொரியு நீரெனப் பல்லுயிர் போற்றுவை; சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை; விரியும் நீள்கடல் என்ன நிறைந்தனை வெல்க காளி யெனதம்மை வெல்கவே. (3)