பக்கம்:சைவமும் தமிழும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் ? & விருத்தங்களைபம் கொண்டவை. எனவே, இதனைச் சிவ ஞான போதத்திற்குச் செய்யுளால் அமைந்த மாயாடியம் என்று கருதலாம். இதன் பரபக்கம் பிற சமயங்களின் பொருளை அவை கூறுமாறே கூறி, அவற்றை அவ்விடத்தி லேயே சித்தாந்தப் பார்வையால் மறுக்கின்றது. அதனால் பரபக்கம் முழுவதும் மதமும் மறுதலையுமாக அமைந் துள்ளது. சுபக்கம் சிவஞான போதத்தின் ஒவ்வோர் நூற்பாப் பொருளையும் ஒவ்வோர் இயலாக வைத்து அதன் போக்கிலேயே சித்தாந்தக் கருத்துகளைத் தடை விடைகளால் விளக்குகின்றது. தடைகள் பரபக்கப் பார்வை யால் நிகழ்வனவாக அமைந்துள்ளன. இதன் பெருமையை, "பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின், சித்தியிலே ஓர் விருத்தப் பாதிபோ தும்' என்று குருஞான சம்பந்தரும், பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகஉண்மை சாதித்தார் பொன்னடி' என்று தாயுமான அடிகளும் சிறப்பித் துப் பேசுவர். சிவத் துக்குமேல் இல்லை தெய்வம்; சிவஞான சித்திக்குமேல் இல்லை நூல்' என்ற பழமொழியும் வழக்கிலுள்ளது. சித்தியாருக்கு மறைஞானசம்பந்தர், சிவாக்கிர யோகி கள், ஞானப்பிரகாசர், நிரம்ப அழகிய தேசிகர், மாதவச் சிவஞான யோகிகள், சுப்பிரமணிய தேசிகர் என்னும் அறுவர் உரைகள் கிடைக்கின்றன. இவர்களுள் இறுதியில் குறிப்பிட்ட சுப்பிரமணிய தேசிகர் சிவஞான யோகிகளின் பொழிப்புரையை, முறுக்கைச் சிறு துண்டுகளாக உடைத்து வழங்குவதுபோல், சொற் பொருளாக்கி விளக்கியுள்ளார். இது படிப்போருக்குச் சற்று எளிதாக அமைந்து விளக்கம் 28. சிவயோத சாகரம்.23. 24. தாஜ. பா.. எந்நாட்கண்ணி-26