பக்கம்:சைவமும் தமிழும்.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 - - சைவமும் தமிழும் வாயு வாகி வெளியை அளந்தனை வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை: தேயு வாகி யொளியருள் செய்குவை; - செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை பாயு மாயிரம் சக்திக ளாகியே - - பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை; சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை, (4) நிலத்தின் கீழ்பல் லுலோகங்க ளாயினை, நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை, தலத்தின் மீது மலையும் நதிகளும், சாரும் காடும் சுனைகளு மாயினை; குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை, புலத்தை யிட்டிங் குயிர்கள்செய்தாய், அன்னே போற்றி போற்றி, நின்னருள் போற்றியே. (5) கற்பனைத் தொலைநோக்கியைக் கொண்டு இந்த அகிலத்தையே நோக்கும் கவிஞன் திறன் நம்மை வியக்க வைக்கின்றது. (35) 'ஊழிக்கூத்து என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. இதன் மெட்டு படிப்போரைத் திக்குமுக்காடச் செய்யும். வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப்-பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித் தாடுங் காளி: சாமுண்டிகங் காளி! அன்னை: அன்னை: ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை (;) என்பது முதற் பாடல்.