பக்கம்:சைவமும் தமிழும்.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 551 (28) மகாசக்தி என்ற தலைப்பில் மூன்று பாடல்கள். இவற்றில், சந்திர னொளியில் அவளைக் கண்டேன், சரண மென்று புகுந்து கொண்டேன் இந்திரி யங்களை வென்று விட்டேன் . எனதென் ஆசையைக் கொன்று விட்டேன் (1) என்பது இதன் முதற்பாடல். (14) மகாசக்திக்கு விண்ணப்பம்: என்ற தலைப்பில் மூன்று பாடல்கள். இவற்றில், மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச்சாய்த்துவிடு-அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு: யோகத் திருத்திவிடு-அல்லா லென்றள் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன யாவையும் செய்பவளே! (1) என்பது முதல் பாடல். (39) வெற்றி என்ற தலைப்பில் இரண்டு பாடல்கள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கனும் வெற்றி வேண்டி னேனுக் கருளினள் காளி, தடுத்து நிற்பது த்ெய்வத மேனும் சாரு மானுட மாயினும் அஃதைப் படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி பாரில் வெற்றி யெனக்குறு மாறே. (1) என்பது முதல் பாடல்.