பக்கம்:சைவமும் தமிழும்.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 சைவமும் தமிழும் (36) காளிக்கு சமர்ப்பணம் என்ற தலைப்பில் ஒரே ஒரு பாடல். அது; - இந்த மெய்யும் கரணமும் பொறியும். ల్హట్ట్ల வருடங்கள் காத்தனன், வந்த னம்.அடி பேரருள் அன்னாய் வைர வீதிறற் சாமுண்டி காளி! சிந்த னைதெளிந் தேனினி யுன்றன் திருவ ருட்கெனை அர்ப்பணம் செய்தேன் வந்தி ருந்து பலபய னாகும் - வகைதெ ரிந்துகொள் வாழி யடி! நீ என்பது. - - (15 அன்னையை வேண்டுதல்: ஒரே ஒரு தனிப் பாடல். எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பணியேபோல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய்! என்பது. (2) இசை வழியில் (கீர்த்தனைகள்). இவ்வகையிலும் சைவ இலக்கியங்கள் உண்டு. அவை. (2) முருகன் பாட்டு: முருகா-முருகா-முருகா என்று தொடங்குவது. (4) முருகக்கடவுள் மீது கிளித்துது: சொல்ல வல்லாயோ?-கிளியே - சொல்லநீ வல்லாயோ? என்று தொடங்குவது.