பக்கம்:சைவமும் தமிழும்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 553 (3) வேலன் பாட்டு என்ற தலைப்பில் மூன்று பாடல் கள். முதல் பாட்டு. வில்லினை யொத்த புருவம் வளைத்தனை (്ഖണ്ഡഖ് ! என்று தொடங்குவது. (20) சக்திக் கூத்து - தகத் தகத் தகத் தகதகவென் றாடாமோ?-சிவ சக்தி சக்தி சக்தியென்று பாடாமோ? என்று தொடங்குவது. (24) சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் சக்தி தனக்கே கருவி யாக்கு-அது என்று தொடங்குவது. இது மிக நீண்டதோர் பாட்டு. சுருக்கமாகக் கூறினால் பாரதியார் பதியின் தடத்த நிலையையே அதிகமாகப் பேசியுள்ளார். தம்மையும் 'சக்திதாசன் என்றும் கூறிக் கொள்ளுகின்றார். பாடல், பதிக எண்கள் மாபெருங் கவிஞர் பாரதியார் கவிதைகள்' (ரெட்டியார் பதிப்பு - ஐந்தினை வெளியீடு) என்பதில் உள்ளவாறு போடப்பெற்றுள்ளன. 5. தேசிகவிநாயகம் பிள்ளை (1876-1954) கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தை அடுத்த தேரூரில் பிறந்தார். தந்ைைதயார்-சிவதாணுப்பிள்ளை; அன்னையார் ஆதிலட்சுமி அம்மையார். தொடக்கக் கல்வி-தேரூர், ஆங்கிலப் பாடசாலைப் படிப்பு- கோட் டாறு. கல்லூரிப்படிப்பு எப்.ஏ. திருமணம். புத்தேரியில் பிறந்த புனிதவதி என்ற பெயரையுடைய அம்மையார் வாழ்க்கைத் துணைவியானார். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர். தே.வி. கவிமணி (பட்டம்) என்ற சுருக்கப்பெயர்களே இவரைக்