பக்கம்:சைவமும் தமிழும்.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 சைவமும் தமிழும். குறிக்கும். நாகர்கோயிலுக்குச் சுமார் இரண்டு கல் வடக்கேயுள்ள புத்தேரியை (மனைவியார் பிறந்த ஊர்) சாந்தி வாழ்க்கைக்குரிய இ டமாகக் கொண்டு வாழ்ந்தவர்.' இவர் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு 'மலரும் மாலையும் என்பது. இதில் சைவ இலக்கியங்களாக கலைமகள் துதி அஞ்சலி (12 பாடல்கள்), சுசீந்திரமாலை, குமரிப்பகவதி, முருகன் புகழ்மாலை (4 பாடல்கள்) அழகம்மை ஆசிரியவிருத்தம் (மயாடல்கள்) கோயில் வழிபாடு (பாடல்கள்) காணப்பெறுகின்றன. இவை 'பக்திமஞ்சரி என்ற தலைப்பின்கீழ் அமைந்துள்ளன. இவற்றில் சில ஈண்டுக் காட்ட ப்பெறுகின்றன. 1. கலைமகள் துதி: ஒரே ஒரு பாடல்: நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள் தேடிக்கொழிக்கும் கவிவாணர் நாவும், செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே!) உன்பாதம் அடைக்கலமே..? இது குமரகுருபரரின் கலைமகள் பற்றிய பாடல்களை விஞ்சி நிற்பதுபோல் தோன்றுகின்றது. - 3 அஞ்சலி: இத்தலைப்பின்கீழ் வரும் இரண்டு பாடல் ತ5ರ್$! பண்னொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள் பாலிக்கும் வேளை, இந்தப் பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப் பரந்துளம் விம்ம நிற்பேன்; 1. இந்த இடத்தில்தான் 1948-மே திங்களில் டாக்டர் ரெட்டியார் இவரைச் சந்தித்து அளவளாவினார். - 2. மலரும் மாலையும் பக்தி மஞ்சரியில் முதல் பாடல்.